பாகிஸ்தானில் 14 பயணியர் சுட்டுக்கொலை

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் 14 பயணியர் சுட்டுக்கொலை

கராச்சி,பாகிஸ்தானில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த 14 பயணியரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொன்றனர்.பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து குவாதர் என்ற இடத்தை நோக்கி ஆறு பயணியர் பஸ்கள் சென்று கொண்டிருந்தன. பலுா சிஸ்தான் மாகாணத்தில் உள்ள மக்ரான் நெடுஞ்சாலையில் துணை ராணுவப்படை சீருடை அணிந்த 20 பேர் அந்த பஸ்களை வழிமறித்தனர். அதிலிருந்து 16 பயணியரை மட்டும் கீழே இறங்கும்படி கூறினர்.இறங்கியதும் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இருவர் தப்பிச் சென்றனர். 'இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்புகள் எதுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை; தாக்குதலுக்கான காரணமும் தெரியவில்லை' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை