லசித் மலிங்கா வாய்ப்பு: இலங்கை அணி அறிவிப்பு | ஏப்ரல் 18, 2019

தினமலர்  தினமலர்
லசித் மலிங்கா வாய்ப்பு: இலங்கை அணி அறிவிப்பு | ஏப்ரல் 18, 2019

கொழும்பு: உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில், வரும் மே 30ல் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) அறிவித்தது. இதில், சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் ‘ஆல்–ரவுண்டர்’ ஜீவன் மெண்டிஸ் 35, இடம் பிடித்துள்ளார். இவர், கடைசியாக 2015ல் டுனிடினில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் விளையாடினார். இதேபோல 2 ஆண்டுகளுக்கு பின் சுழற்பந்துவீச்சாளர் ஜெப்ரி வான்டர்சே வாய்ப்பு பெற்றுள்ளார்.

கேப்டனாக திமுத் கருணாரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கேப்டன் தினேஷ் சண்டிமால், விக்கெட் கீப்பர்–பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா, சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இலங்கை அணி: திமுத் கருணாரத்னே (கேப்டன்), லசித் மலிங்கா, ஏஞ்சலோ மாத்யூஸ், திசாரா பெரேரா, குசால் ஜனித் பெரேரா, தனஞ்செயா டி சில்வா, குசால் மெண்டிஸ், இசுரு உதானா, மிலிந்தா ஸ்ரீவர்தனா, அவிஷ்கா பெர்ணான்டோ, ஜீவன் மெண்டிஸ், லகிரு திரிமான்னே, ஜெப்ரி வான்டர்சே, நுவான் பிரதீப், சுரங்கா லக்மல்.

மூலக்கதை