ஆமிருக்கு கல்தா * பாக்., அணி அறிவிப்பு | ஏப்ரல் 18, 2019

தினமலர்  தினமலர்
ஆமிருக்கு கல்தா * பாக்., அணி அறிவிப்பு | ஏப்ரல் 18, 2019

 கராச்சி: உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் சேர்க்கப்படவில்லை.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வரும் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தெரிவித்தது. இருப்பினும் மே 23 வரை ஐ.சி.சி., அனுமதி இல்லாமல் வீரர்களில் மாற்றம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டன. நேற்று 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. சமீப காலமாக சரியான ‘பார்ம்’ இல்லாமல் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் எதிர்பார்த்தபடியே அணியில் சேர்க்கப்படவில்லை.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரிக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. கேப்டனாக, விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமது தொடர்கிறார். கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் ஆன அணியில் இடம் பெற்ற 11 பேர், தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அணி விவரம்

சர்பராஸ் அகமது (கேப்டன்), பகர் ஜமான், இமாம் உல் ஹக், அபித் அலி, பாபர் ஆசம், சோயப் மாலிக், முகமது ஹபீஸ், ஷாதப் கான், இமாத் வாசிம், ஹாரிஸ் சோகைல், ஹசன் அலி, பகீம் அஷ்ரப், ஷகீன் அப்ரிதி, ஜுனைடு கான், முகமது ஹஸ்நைன்.

மூலக்கதை