தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா | ஏப்ரல் 18, 2019

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா | ஏப்ரல் 18, 2019

ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா சேர்க்கப்பட்டார். 

இங்கிலாந்தில் வரும் மே 30ல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மோசமான பார்ம் காரணமாக அணியில் இடம் பெற மாட்டார் என நம்பப்பட்ட ஆம்லா, ‘உலக’ அணியில் இடம் பெற்றார். டுபிளசி கேப்டனாக உள்ள இந்த அணியில் குயின்டன் டி காக் மட்டும் விக்கெட் கீப்பராக உள்ளார். ஒருவேளை இவருக்கு காயம் எனில் மில்லர் பொறுப்பேற்பார். 

இதற்காகத் தான் சமீபத்திய இலங்கை தொடரில் மில்லர், விக்கெட் கீப்பராக செயல்பட்டு பயிற்சி எடுத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஆல் ரவுண்டர்’ கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்படவில்லை. இந்தியாவில் நடந்த 2011 தொடரில் அறிமுகம் ஆன டுபிளசி, டுமினி, ஆம்லா, ஸ்டைன், இம்ரான் தாகிர் என 5 வீரர்கள் தற்போது மூன்றாவது உலக கோப்பை தொடரில் களமிறங்குகின்றனர். 

மில்லர், குயின்டன் டி காக் இரண்டாவது தொடரில் பங்கேற்க உள்ளனர். அறிமுக போட்டியில் சதம் அடித்த ரீஜா ஹென்ரிக்சிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

அணி விவரம்

டுபிளசி (கேப்டன்), டுமினி, மில்லர், ஸ்டைன், பெலுக்வாயோ, இம்ரான் தாகிர், ரபாடா, பிரிட்டோரியஸ், குயின்டன் டி காக், நார்ட்ஜே, லுங்கிடி, மார்க்ரம், வான்டர் டுசென், ஆம்லா, ஷம்சி.

மூலக்கதை