விதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
விதிமுறைகளை மீறி மோடி ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரி சஸ்பெண்ட்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை விதிமுறைகளை மீறி சோதனை செய்த தேர்தல் பார்வையாளரை, தேர்தல் ஆணையம் நேற்று சஸ்பெண்ட் செய்தது.தேர்தல் பிரசாரத்துக்காக ஒடிசா மாநிலம் சம்பல்பூருக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றிருந்தார். அப்போது ஒடிசா மாநிலம் சம்பல்பூர் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி முகமது மொஹ்சின் பிரதமர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்தார். இந்த திடீர் சோதனையால் பிரதமர் மோடி 15 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது. சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்பிஜி) பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் டிஐஜியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. அதன்படி சம்பல்பூர் தேர்தல் பார்வையாளரை, தேர்தல் ஆணையம் நேற்று சஸ்பெண்ட் செய்தது.    

மூலக்கதை