கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... ? குழப்புறிங்களே

தினகரன்  தினகரன்
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... ? குழப்புறிங்களே

 சென்னை : கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ தமிழத்தில் இன்று நடக்கும் மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தமிழகத்தில் வேலூர் நீங்களாக 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் பொது மக்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். நடிகர் அஜித் திருவான்மியூரில் ஓட்டு பதிவு செய்தார். நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.விஜய் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்த புகைப்படங்களை ஒருவிரல் புரட்சி (#OruViralPuratchi) என்ற ஹேஷ்டேக் உடன் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும், சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்களித்ததாகவும் அவர்களில் பலர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.சர்கார் படத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் விஜய், ஓட்டு போடுவதற்காக தமிழகம் வந்திருப்பார். அப்போது, அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. தற்போது, சுந்தர் பிச்சையும் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பதால், அவர் ஓட்டுபோட தமிழகம் வந்துள்ளதாக புகைப்படங்களை பலர் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பதே உண்மை.இணையத்தில் வைரலாகும் புகைப்படம் அவர் கடந்த 2017-ம் ஆண்டு கரக்பூர் ஐஐடிக்கு வந்த போது எடுத்த படம். தான் படித்த ஐஐடிக்கு அவர் வந்திருந்தபோது அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. தனது ட்விட்டரில் அவரே அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை