விண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை

தினகரன்  தினகரன்
விண்வெளியில் ஓராண்டுக்கு மேல் தங்கி சாதனை படைக்கிறார் அமெரிக்க வீராங்கனை

மாஸ்கோ: விண்வெளியில் ஆராய்ச்சி பணிக்காக ஓராண்டு தங்குவதன் மூலம் அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா கூக் புதிய சாதனை படைக்க உள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளின் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரே சமயத்தில் 6 விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி பணிமேற்வர்.இவர்களில் 3 பேர் 5 முதல் 6 மாதங்கள் வரை தங்கிவிட்டு பூமிக்கு திரும்புவர். இதையடுத்து, புதிதாக 3 வீரர்கள் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். தற்போது சோயுஸ் எம்எஸ்-13 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஸ்கோவோர்ட்சோவ், இத்தாலியின் லூகா பர்மிடானோவுடன் அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கூக் செல்ல இருக்கிறார். இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்க உள்ளனர். இதன் மூலம், அதிக நாட்கள் விண்வெளியில் தங்கும் வீராங்கனை என்ற பெருமைக்கு உரியவராகிறார் கிறிஸ்டினா கூக். மற்ற இரண்டு வீரர்களும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், கடந்த 2016-17ல் அமெரிக்க வீராங்கனை பெக்கி விட்சன் அதிகபட்சமாக விண்வெளியில் 289 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.

மூலக்கதை