ரஜினி படத்தில் நெகட்டிவ் ரோலில் நயன்தாரா

தினமலர்  தினமலர்
ரஜினி படத்தில் நெகட்டிவ் ரோலில் நயன்தாரா

ரஜினி நடித்த சந்திரமுகியில் அவருக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அதன்பிறகு குசேலனில் இருவருமே நடிகர் - நடிகையாகவே நடித்தனர். சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் நயன்தாரா.

இந்த நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்திலும் இணைந்துள்ளார் நயன்தாரா. ஆனால் இந்த படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக அல்லாமல் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

அதேபோல் ரஜினிக்கு மகளாக பாபநாசம் படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை