ஐபிஎல் டி20 தொடரில் இன்று... சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் டி20 தொடரில் இன்று... சென்னைராஜஸ்தான் அணிகள் மோதல்

ஜெய்ப்பூர்:  ஐபிஎல் டி20 தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை மோதியுள்ளன. பரபரப்பாக நடந்த அப்போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

இத்தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அஜிங்க்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, இதுவரை 5 போட்டிகளில் ஆடி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேப்டன் அஜிங்க்யா ரஹானே என அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலிமையாக காட்சியளிக்கிறது. தவிர மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் உள்ளார்.

தவால் குல்கர்னி, கிருஷ்ணப்பா கௌதம், ஜெய்தேவ் உனட்கட் என பவுலர்களும் வரிசை கட்டுகின்றனர்.

ஆனால் சென்னை அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் நல்ல ஃபார்மில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ட்வைன் ப்ராவோ என சென்னை அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள், ராஜஸ்தான் பவுலர்களுக்கு கடும் நெருக்கடியை தர காத்திருக்கின்றனர்.

இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஸ்காட் குக்கலீஜின் என சென்னை அணி பந்துவீச்சிலும் பயமுறுத்துகிறது.

சொந்த மைதானத்தில் ஆடவுள்ளது ராஜஸ்தான் அணி என்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

.

மூலக்கதை