ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம்

PARIS TAMIL  PARIS TAMIL
ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம்

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான இயக்குனர்கள் பட்டியலில் பாரதிராஜா, விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர்.

 
பிரியதர்ஷினி முதல் ஆளாக தன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை அறிவித்தார். இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ‘த அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இந்தி நடிகைகள் வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இந்த கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் கங்கனா ரணாவத் நடிப்பது உறுதியானது. 
 
இவை தவிர கவுதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற தலைப்பில் இணைய தொடராக ஜெயலலிதா வாழ்க்கை படம் உருவாகிறது.
 
 
 
தமிழ் இயக்குனர்களோடு தெலுங்கு இயக்குனர்களும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சி செய்து வருகின்றனர். தெலுங்கு பட உலகில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. இவர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை சசிகலாவை முன்னிறுத்தி இயக்கப்போவதாக அறிவித்தார். சசிகலா என்ற பெயரில் சசிகலாவின் படத்தையே போஸ்டரில் பயன்படுத்தி இருந்தார்.
 
இந்த படங்களுக்கு இடையே சசிலலிதா என்ற பெயரில், இன்னொரு படம் உருவாகிறது. தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்‘ நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம், இரண்டு பாகமாக உருவாகிறது. படத்தின் போஸ்டரில் ஜெயலலிதா சசிகலா இருவரின் படங்களும் உள்ளன

மூலக்கதை