கருவுற்ற 17 அடி மலைப்பாம்பை பிடித்த அதிகாரிகள்!

PARIS TAMIL  PARIS TAMIL
கருவுற்ற 17 அடி மலைப்பாம்பை பிடித்த அதிகாரிகள்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் 17 அடி மலைப்பாம்பை விஞ்ஞானிகள் பிடித்துள்ளனர்.

 
அந்தப் பாம்பின் வயிற்றில் 73 முட்டைகள் இருந்தன. அதன் எடை சுமார் 63.5 கிலோகிராம்.
 
பிக் சைப்பிரஸ் வனப் பகுதியில் இருந்து அந்த மலைப் பாம்பு மீட்கப்பட்டது.
 
உலகின் ஆக பெரிய பாம்பு இனங்களில் ஒன்றான அது, பர்மா மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது.
 
வனப் பகுதிகளில் மலைப்பாம்புகள் மற்ற விலங்குகளுக்கு மிரட்டலாக அமைகின்றன.
 
அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, ஃபுளோரிடாவில் மலைப்பாம்புகளை வேட்டையாடும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. 
 

 

மூலக்கதை