சினிமா பரபரப்பில்லாத தமிழ்ப் புத்தாண்டு

PARIS TAMIL  PARIS TAMIL
சினிமா பரபரப்பில்லாத தமிழ்ப் புத்தாண்டு

 தமிழ்த் திரையுலகத்தில் முக்கியமான மூன்று இந்துப் பண்டிகைகளான பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, தீபாவளி ஆகிய நாட்களில்தான் பெரிய படங்களும், நிறைய படங்களும் வெளிவரும். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும் அளவிற்கு கடந்த சில வருடங்களாக அதிகப் படங்கள் வருவதில்லை. அப்படியே வரும் ஒரு சில படங்களும் விடுமுறை நாட்களின் வசூலைக் கருத்தில் கொண்டு ஒரு சில நாட்கள் முன்னதாகவே வெளியாகின்றன.

2019 வருடப் பொங்கலுக்கு பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதி படங்களை வெளியிடாமல் ஐந்து நாட்கள் முன்னதாக ஜனவரி 10ம் தேதி 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய படங்களை வெளியிட்டார்கள்.

இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு இரு தினங்கள் முன்னதாகவே மூன்று புதிய படங்களை வெளியிடுகிறார்கள். அன்று 'வாட்ச்மேன், ஆர்கே நகர், கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் மூன்று படங்களின் பெயர்களும் தமிழில் இல்லாதது அதிர்ச்சியானது. வரி விலக்கு என்றால்தான் தமிழ்ப் பாசம் என்பதை நமது திரையுலகினரும் சொல்லாமல் சொல்கிறார்கள்.

 

மூலக்கதை