சபரிமலையில் தரிசனத்திற்கு வந்த 4 இளம்பெண்கள் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டனர்

தினகரன்  தினகரன்
சபரிமலையில் தரிசனத்திற்கு வந்த 4 இளம்பெண்கள் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21ம் தேதிவரை இந்த விழா நடக்கிறது. இந்த முறையும் இளம் பெண்கள் சபரிமலைக்கு வர  வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 பேர், பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று கொண்டிருந்தனர். அந்த குழுவில் ஒரு இளம் பெண் இருக்கலாம்  என்ற சந்ேதகம் பக்தர்களுக்கு ஏற்பட்டது.இதையடுத்து பக்தர்கள் அந்த குழுவினரிடம் விசாரித்தனர். அப்போது 45 வயதுக்கு குறைவான ஒரு பெண் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணை தரிசனத்திற்கு செல்லக் கூடாது என்று பக்தர்கள் எதிர்ப்பு  தெரிவித்தனர். பிறகு அந்த பெண்ணை திருப்பி அனுப்பினர். இது மரக்கூட்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதே போல் ஆந்திராவை சேர்ந்த 3 இளம் பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்கள் சன்னிதானம் செல்ல பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 3 இளம் பெண்களையும் திருப்பி அனுப்பினர். இந்த  சம்பவத்தால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை