ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: நாளை முதல் டிக்கெட் விற்பனை

தினகரன்  தினகரன்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: நாளை முதல் டிக்கெட் விற்பனை

சென்னை: சென்னையில் நடைபெற ஐபிஎல் டி20 கிரிக்கெட் ேபாட்டிகக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் நடைபெற உள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.1300. இந்தியன் பிரிமீயர் லீக்(ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால் முதல் கட்ட போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில்  மார்ச் 23, 31 தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. சேப்பாக்கம் விளையாட்டரங்கில் மார்ச் 23ம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -  ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை  தொடங்குகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில்  பகல் 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட்களை வாங்கலாம். மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் விற்பனை நடைபெறும். பகல் 12.30 முதல் 2 மணி வரை உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டரங்கில் சி, டி, ஈ பகுதிகளில் உள்ள கீழ்தளங்களுக்கான  ரூ.1300 விலையுள்ள டிக்கெட்கள்   6வது வாயிலிலும்,  இதே பிரிவில் மேல் தளங்களுக்கான  ரூ.2500 விலையுள்ள டிக்கெட்கள் 3வது வாயிலிலும் விற்பனை செய்யப்படும். இவை தவிர சிறப்பு வகுப்புகளுக்கு  ரூ.5000, 6500 விலையில் டிக்கெட்கள் விற்கப்படும். மேலும் in.bookmyshow.com  என்ற இணையதளம் மூலமாகவும் டிக்கெட்கள் கிடைக்கும்.

மூலக்கதை