ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதம்: கிறிஸ் கெய்ல் உலக சாதனை

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதம்: கிறிஸ் கெய்ல் உலக சாதனை

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த கிறிஸ் கெய்ல், உலகக் கோப்பை வரலாற்றில் , ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக தென் ஆப்ரிக்க வீரர் கேரி கிறிஸ்ஸ்டன், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 188 ரன்கள் எடுத்ததே, உலகக் கோப்பை போட்டியில், தனிநபரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார் கிறிஸ் கெய்ல். கிறிஸ் கெய்ல் 138வது பந்தில், இரட்டை சதம் அடித்தார். 147 பந்துகளை எதிர்கொண்ட அவர் , 16 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உட்பட 215 ரன்கள் சேர்த்தார்.

மூலக்கதை