இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு | மார்ச் 13, 2019

தினமலர்  தினமலர்
இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு | மார்ச் 13, 2019

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் தொடர் 2–2 என சமநிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி டில்லியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சகால், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு ஜடேஜா, ஷமி சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெஹ்ரன்டர்ப்பிற்குப்பதில் ஸ்டாய்னிஸ், லியான் வாய்ப்பு பெற்றனர்.

கவாஜா சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், கவாஜா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தபோது, பின்ச் (27) ஆட்டமிழந்தார். கவாஜா (100) சதம் எட்டினார். ஜடேஜா ‘சுழலில்’ மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் (52) அரை சதம் கடந்தார். டர்னர், ஸ்டாய்னிஸ் தலா 20 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. லியான் (1) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தவான் ஏமாற்றம்

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. கம்மின்ஸ் பந்தில் தவான் (12) ஆட்டமிழந்தார்.  ஸ்டாய்னிஸ் பந்தில் கோஹ்லி (20) சிக்கினார். ரிஷாப் 16 ரன்களில் அவுட்டானர். ரோகித் அரை சதம் கடந்தார். ஜாம்பா ‘சுழலில்’ விஜய் சங்கர் (16), ரோகித் (56), ஜடேஜா (0) ஆட்டமிழந்தனர். ஜாதவ், புவனேஷ்வர் இணைந்து போராடினர். புவனேஷ்வர் 46 ரன்களில் அவுட்டானார். ரிச்சர்ட்சன் பந்தில் ஜாதவ் (44) ஆட்டமிழக்க தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ஷமி (3), குல்தீப் (9) விரைவில் திரும்ப, இந்திய அணி 50 ஓவரில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜாம்பா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2–3 என இழந்தது. 

 

 

 

 

 

மூலக்கதை