தூய்மை நகரங்கள் பட்டியலில் 3-வது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்து விருது பெறுகிறது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தூய்மை நகரங்கள் பட்டியலில் 3 -வது முறையாக, இந்தூர் முதலிடம் பிடித்து விருது பெறுகிறது.
இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது. தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பினை மத்திய அரசு நடத்தி பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த நிலையில் தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்  சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை வழங்கினார். 
இதில் இந்தியாவின் சிறந்த தூய்மையான நகரமாக இந்தூர் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. 

மேலும் தூய்மையான சிறிய நகரம் விருது, டெல்லியின் நகராட்சி கவுன்சில் பகுதிக்கு வழங்கப்பட்டது. சிறந்த கங்கா மாவட்டத்திற்கான விருது, உத்தரகாண்ட் மாநிலத்தின் கவுச்சர் பகுதிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

தூய்மை நகரத்துக்கான விருது பெற்ற இந்தூருக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி,  வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மூலக்கதை