அன்று முஷாரப் செய்ததை இன்று மோடி செய்கிறார்! இம்ரான்கான்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அன்று முஷாரப் செய்ததை இன்று மோடி செய்கிறார்! இம்ரான்கான்

புதுடெல்லி: தேர்தல் காலங்களில் அன்று முஷாரப் செய்ததை இன்று மோடி செய்கிறார்’ என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளது. தனியார் செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி அளித்த பேட்டியில், ‘‘மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார்.

எனினும், வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு மசூத் அசார் உடல்நலன் குன்றியுள்ளார். போர் பதற்றத்தை தணிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் வரவேற்கிறது.

இந்தியாவிடம் உறுதியான ஆதாரம் இருக்குமானால், அதை அவர்கள் ஒப்படைக்கட்டும். அதன் பிறகு, இருதரப்பும் அமர்ந்து பேசி, நல்லதொரு தீர்வை எட்டுவோம்’’ என்றார்.

இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டி கூறியிருப்பதாவது:
இந்தியா மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் என்றுமே இருந்தது இல்லை.

தேர்தல் வரும் சமயங்களில் இரு நாட்டு அரசியல்வாதிகளும், தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக, போர் ஏற்படும் சூழல்களை உருவாக்குவார்கள். முன்பு பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் செய்ததை, இன்று இந்தியாவின் பிரதமர் மோடி செய்கிறார்.

போர் நடக்குமென்ற சூழல் நிலவும் போது, ஒரு நல்ல தலைவர் போர்வீரர்களிடம்தான் பேசுவார். ஆனால் இன்று,  இந்தியப் பிரதமர் மோடி வாக்காளர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்தியஅரசியல்வாதிகளைப் பற்றி மேற்கொண்டு பேச நான் விரும்பவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

.

மூலக்கதை