உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதுகின்றன.

 

பி பிரிவில் நடக்கும் இந்த 15வது லீக் ஆட்டம், ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில், இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நடப்புத் தொடரில் இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவின. அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பின்னர் பாகிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது. இதேபோல் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரசு எமிரேட்சை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளில் மோதிய 4 ஆட்டஙகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் பார்ம் இல்லாமல் தவிக்கிறார். இதேபோல் முன்னணி வீரர் டேரன் பிராவோ காயம் காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இருப்பினும் சாமுவேல்ஸ், ராம்தின், டேரன் சமி, ரசல் உள்ளிட்ட வீரர்கள் இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் நம்பிக்கையுடன் உள்ளது. இதேபோல் சக்பவா, சிக்கந்தர் ரசா,சதாரா உள்ளிட்ட அதிரடி வீரர்களுடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

மூலக்கதை