சாதனா குடும்பத்திடம் பேரன்பு காட்டிய மம்முட்டி குடும்பம்

தினமலர்  தினமலர்
சாதனா குடும்பத்திடம் பேரன்பு காட்டிய மம்முட்டி குடும்பம்

சமீபத்தில் இயக்குனர் ராம் டைரக்சனில் மம்முட்டி நடித்து வெளியான பேரன்பு படத்தில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு டீன் ஏஜ் பெண்ணாக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தங்கமீன்கள் சாதனா. தன்கமீன்கள் படத்திலேயே தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் இந்த படத்தில் தனது உயிரோட்டமான நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்து விட்டார்.

தனது மகளாக நடித்திருந்த சாதனா மீது மம்முட்டிக்கு தனிப்பாசமே உருவாகிவிட்டதாம். சமீபத்தில் சாதனா மற்றும் அவரது பெற்றோரை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து உபசரித்து கவுரவப்படுத்தி உள்ளார் மம்முட்டி. இந்த நிகழ்வின் போது மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மானும் கலந்துகொண்டு, சாதனா மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேரன்பு குறித்தும் சாதனாவின் நடிப்பு குறித்தும் தனது பாராட்டுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மூலக்கதை