மகளிர் டி20 தொடர் நியூசி. ஹாட்ரிக் வெற்றி

தினகரன்  தினகரன்
மகளிர் டி20 தொடர் நியூசி. ஹாட்ரிக் வெற்றி

ஹாமில்டன்: இந்திய மகளிர் அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ்  செய்தது.செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. சோபி டிவைன் 71  ரன் (52 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), சூஸி பேட்ஸ் 24, ஹன்னா 12, கேப்டன் சாட்டர்த்வெய்ட் 31 ரன் விளாசினர். அடுத்து  களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து, நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. ஸ்மிரிதி மந்தனா 86 ரன் (62 பந்து, 12  பவுண்டரி, 1 சிக்சர்), ஜெமிமா 21, கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மித்தாலி ராஜ் 24 ரன், தீப்தி ஷர்மா 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல்  இருந்தனர். 2 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

மூலக்கதை