ரிக்கி பொன்டிங்கிற்கு புதிய பதவி

PARIS TAMIL  PARIS TAMIL
ரிக்கி பொன்டிங்கிற்கு புதிய பதவி

 அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக ரிக்கி பொன்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

 
எதிர்வரும் உலக கிண்ணத் தொடரின் போது அவர் அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
44 வயதான பொன்டிங், ஜஸ்டின் லாங்கர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவில் இணைந்துக்கொள்வதுடன், அவர் ஒருநாள் துடுப்பாட்டம் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
 
தற்போது துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இருக்கும் க்ரேம் ஹிக், உலக கிண்ணத் தொடருக்குப் பின்னர் இடம்பெறவுள்ள ஆசஸ் தொடருக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவுஸ்திரேலிய அணிக்கான உதவிப் பயிற்றுவிப்பாளராக இருந்த டேவிட் சாகர் பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை