டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் ;பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் ;பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர், முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைக்க சிலர் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசிய அந்த மர்ம நபர், பின்னர் தொலைபேசி இணைப்பை  துண்டித்துவிட்டார்.

இதன்பிறகு காலர் ஐடி வைத்து அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர்.

அப்போது, வடக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வந்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மிரட்டலையடுத்து டெல்லியில் உள்ள முதல்வரின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கெஜ்ரிவாலின் மகளை கடத்த இருப்பதாகவும், அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் குண்டு வைத்துள்ளதாகவும், பல முறை மிரட்டல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை