பிக் பாஷ் டி20ல் ஹோபர்ட் அசத்தல்

தினகரன்  தினகரன்
பிக் பாஷ் டி20ல் ஹோபர்ட் அசத்தல்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 10 விக்கெட் வித்தியாசதில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்று பேட் செய்த அடிலெய்டு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. கேப்டன் இங்ராம் ஆட்டமிழக்காமல் 67 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அடுத்து களமிறங்கிய ஹோபர்ட் 16.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 158 ரன் எடுத்து வென்றது (கேப்டன் மேத்யூ வேடு 84*, டார்சி ஷார்ட் 73* ரன் விளாசினர். ஹோபர்ட் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

மூலக்கதை