பண்டஸ் லிகா கால்பந்து போட்டி: உல்ஸ்பர்க் அணி வெற்றி

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
பண்டஸ் லிகா கால்பந்து போட்டி: உல்ஸ்பர்க் அணி வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்று வரும் பண்டஸ் லிகா கால்பந்து போட்டியில் உல்ஸ்பர்க் அணி ஹெர்த்தா பெர்லின் அணியை 2-1என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

உல்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கும் முதலே உல்ஸ்பர்க் அணியின் வீரர்கள் கோல் அடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் ஆட்டத்தின் 10-வது நிமிடமே உல்ஸ்பர்க் அணிமுதல் கோலை அடித்தது. இதையடுத்து 31-வது நிமிடம் இதனை ஹெர்த்தா பெர்லின் வீரர் ஜூலியன் ஸ்கைபெர் கோல் அடித்து சமன் செய்தார். மீண்டும் 2-வது பாதியின் 74-வது நிமிடம் உல்ஸ்பர்க் வீரர் லூயிஸ் கஸ்டாவோ 2-வது கோலை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

மூலக்கதை