கலீல் மீது தோனி கோபம் | ஜனவரி 16, 2019

தினமலர்  தினமலர்
கலீல் மீது தோனி கோபம் | ஜனவரி 16, 2019

அடிலெய்டு: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அடிலெய்டு ஒரு நாள் போட்டியில் கலீல் அகமது மீது கோபப்பட்டார். 

தோனியும், தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். ஓவருக்கு இடையே தரப்பட்ட குளிர்பான இடைவேளையில், மாற்று வீரர்களான சகால், வேகப்பந்துவீச்சாளர் கலீல் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்தனர். அப்போது, தினேஷ் கார்த்திற்கு தண்ணீர் வழங்கிய கலீல் தவறுதலாக ஆடுகள பகுதியை மிதித்த விட்டார். இதை கண்டு கோபப்பட்ட தோனி, ‘சுற்றி வந்தால் என்ன’ என கலீலை நோக்கி ஆக்ரோஷமாக திட்டினார். ‘கூல்’ தோனி கோபப்பட்டது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்துள்ளது.

தவறிய தோனி

அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியின் 45வது ஓவரை ஆஸ்திரேலியாவின் லியான் வீசினார். இதை எதிர் கொண்ட தோனி ரன் எடுக்க ஓடியபோது, மறுமுனையில் (‘நான் ஸ்டிரைக்கர்ஸ்’) உள்ள ‘கிரீசில்’ பேட்டை வைக்க தவறினார். இந்த ‘வீடியோ’ தற்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பார்க்கப்படுகிறது. இதை கண்ட ஆஸ்திரேலிய ‘மீடியா’ தோனி மீது குற்றம் சாட்டி உள்ளது. கடைசி கட்டத்தில் தோனி உடல் அளவில் சோர்வாக இருந்ததால் இப்படி நிகழ்ந்திருக்கலாம் எனத்தெரிகிறது.

டென்னிசை பார்த்த வீரர்கள்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கவுள்ளது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில், இந்திய வீரர்கள் ரோகித், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் மெல்போர்னில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை நேரடியாக கண்டு ரசித்தனர். இவர்களுடன் இந்திய அணி உடற்பயிற்சியாளர் ஷங்கர் பாபுவும் சென்றிருந்தார்.

 

 

மூலக்கதை