ரியோ ஓபன் டென்னிஸ்: டேவிட் பெரர் சாம்பியன்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ரியோ ஓபன் டென்னிஸ்: டேவிட் பெரர் சாம்பியன்

பிரேசிலில் நடைபெற்று வந்த ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினியை எதிர்கொண்டார். விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் டேவிட் பெரர் கைப்பற்றினார். இதே போன்று 2-வது செட்டிலும் பெரரின் ஆதிக்கம் காணப்பட்டது. இதனால் அந்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்ற அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். டேவிட் பெரர் தற்போது உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளார். ரியோ ஓபன் அவர் வெல்லும் 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

மூலக்கதை