உலகக்கோப்பை கிரிக்கெட்: பாக்.அணியின் செய்தியாளர் சந்திப்பு ரத்து

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உலகக்கோப்பை கிரிக்கெட்: பாக்.அணியின் செய்தியாளர் சந்திப்பு ரத்து

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும் பின்னடைவில் உள்ள பாகிஸ்தான் அணி செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்துள்ளது.

 

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பரிதாபகரமாக தோற்றது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் செய்தியாளர் சந்திப்பை சில நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. இதனிடையே அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்வது குறித்து வீரர்களுடன் நீண்ட ஆலோசனை நடைபெற்றது. உலகக் கோப்பை பெற்றுக் கொடுத்த கேப்டன் இம்ரான் கானும் பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். அவர் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் வெற்றி சாத்தியம் என்று கூறியுள்ளார்.

 

மூலக்கதை