திருகோணமலையை குறி வைத்த பிரித்தானியா! அதிரடியாக தயாராகும் புதிய திட்டம்

PARIS TAMIL  PARIS TAMIL
திருகோணமலையை குறி வைத்த பிரித்தானியா! அதிரடியாக தயாராகும் புதிய திட்டம்

பிரித்தானியா திருகோணமலையில் கடற்படை தளத்தை அமைப்பது குறித்து அதிக ஆர்வம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஆசியாவில் தளங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள பிரித்தானியா திருகோணமலையை குறி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் தனது சர்வதேச அந்தஸ்தினை தக்கவைத்துக்கொள்வதற்காக தென்னாசிய நாடுகளிலும் மேற்கிந்திய தீவுகளிலும் கடற்படை தளங்களை அமைப்பது குறித்து பிரித்தானியா ஆராய்ந்து வருகின்றது
 
தென்னாசியாவில் கடற்படை தளங்களை அமைப்பதற்கு பிரித்தானியா ஆர்வம் கொண்டுள்ளதை அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையின் திருகோணமலை, மாலைதீவு அல்லது சிங்கப்பூரில் தளத்தை அமைப்பதற்கு அவர் ஆர்வமாகவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் பிரிட்டன் உலகில் உயர்ந்த நிலையிலேயே காணப்படும் என பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் என டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது இதேவேளை இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதரக அதிகாரிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர்
 
இலங்கையுடன் பிரித்தானியாவிற்கு அவ்வாறான ஏற்பாடுகள் இல்லை என பிரித்தானியாவின் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் பிரித்தானிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார விவகாரங்களில் சர்வதேச அளவில் தொடர்ந்தும் முக்கிய சக்தியாக விளங்கும் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் இலங்கையில் படைதளங்களை அமைக்கும் எண்ணமில்லை என தெரிவித்துள்ளனர்.
 
 
 

மூலக்கதை