புவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா

தினகரன்  தினகரன்
புவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா

சிச்சுவான்: புவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சிச்சுவான் மாகாணத்தில் இருந்து அதிகாலை 1.11 மணிக்கு ஸோங்ஸிங் 2 டி (Zhongxing-2D) என்ற செயற்கைக்கோள் மார்க் 3 டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் தொலைக்காட்சி, வானொலி போன்ற தகவல் சாதனங்களுடன் புவிசார் தொடர்புகளுக்காக செலுத்தப்படுகிறது.

மூலக்கதை