தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் : டெல்லி நிதானம்

தினகரன்  தினகரன்
தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் : டெல்லி நிதானம்

சென்னை: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், டெல்லி அணி முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது.சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழகம் முதல் இன்னிங்சில் 432 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அபினவ் முகுந்த் 134, இந்திரஜித் 86, ரஞ்சன் பால் 78, ஷாருக் கான் 55 ரன் விளாசினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்திருந்த டெல்லி அணி, நேற்று நிதானமாக விளையாடி ரன் குவித்தது.3ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்துள்ளது (103 ஓவர்). குணால் சாண்டிலா 27, ஹிம்மத் சிங் 39 ரன் எடுத்தனர். ஜான்டி சித்து 104 ரன், லலித் யாதவ் 65 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை