'சாப்ட்வேர்' நிறுவனம் இந்திய சிறுவன் அசத்தல்

தினமலர்  தினமலர்
சாப்ட்வேர் நிறுவனம் இந்திய சிறுவன் அசத்தல்

துபாய்:கேரளாவைச் சேர்ந்த, 13 வயது சிறுவன், துபாயில், 'சாப்ட்வேர்' எனப்படும், மென்
பொருள் நிறுவனம் நடத்தி, அசத்தி வருகிறான்.

கேரளா மாநிலம், திருவல்லாவைச் சேர்ந்த சிறுவன், ஆதித்யன் ராஜேஷ், 13. ஆதித்யனுக்கு, 5 வயதானபோது, பெற்றோருடன், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சென்றான். 7 வயதில், பொழுதுபோக்காக, மென்பொருள் ஒன்றை, ஆதித்யன் உருவாக்கினான்.

தற்போது, 13 வயதாகும், ஆதித்யன், 'டிரைநெட் ஸொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, நடத்தி வருகிறான். இந்த நிறுவனம் மூலம், தன் வாடிக்கையாளர்களுக்கு, இணையதளங்கள் உருவாக்கும் பணிகளை, ஆதித்யன் செய்து வருகிறான்.ஆதித்யன் நடத்தும் நிறுவனத்தில், மூன்று ஊழியர்கள் உள்ளனர்; அவர்கள், ஆதித்யனின் பள்ளி தோழர்கள். இதுவரை, 12 வாடிக்கையாளர்களுக்கு, இணையதளம் அமைத்தல் உள்ளிட்ட சேவைகளை அளித்துள்ளதாக, ஆதித்யன் தெரிவித்துள்ளான்.

மூலக்கதை