ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் இந்திய இளம் அணி

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் இந்திய இளம் அணி

கொழும்பு: வளரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. கொழும்புவில் நேற்று நடந்த அரை இறுதியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 44.4 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 67 ரன் எடுத்தார்.  சிறப்பாக பந்துவீசிய மார்கண்டே 4 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 27.3 ஓவரில் 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராணா 60, ஹிம்மத் சிங் 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நாளை காலை 9.45 மணிக்கு கொழும்புவில் தொடங்குகிறது.

மூலக்கதை