கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிப்பு அச்சு வெல்லத்துக்கு கேரள ஆர்டர் குறைப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிப்பு அச்சு வெல்லத்துக்கு கேரள ஆர்டர் குறைப்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி சுற்றுவட்டாரத்தில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகின்றன. பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி விழாவுக்கு வெல்லம் தேவைப்படும். அரவணை பாயசம் தயாரிக்க கேரளாவுக்கு அனுப்ப பழநி சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு மும்முரமாக நடக்கிறது.  இதுகுறித்து வெல்லம் உற்பத்தி செய்யும் பிரபு கூறுகையில், இங்கு தயாராகும் வெல்லம் தர அடிப்படையில் 3 வகையாக பிரிக்கப்பட்டு 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் முறையே 1,150, 1,050, 1,000 என விற்கப்படுகிறது. சில ஆண்டு முன்பு வரை கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து வெல்லம் அதிகமாக சப்ளை செய்யப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கேரளாவிற்கு வெல்லம் சப்ளை அதிகரித்துள்ளதால் பழநி பகுதியில் தயாரிக்கும் வெல்லத்துக்கு ஆர்டர் குறைந்துள்ளது என்றார்.

மூலக்கதை