வருகிற 18ம் தேதி ஐபிஎல் ஏலம் இறுதி பட்டியலில் 9 தமிழக வீரர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வருகிற 18ம் தேதி ஐபிஎல் ஏலம் இறுதி பட்டியலில் 9 தமிழக வீரர்கள்

புதுடெல்லி: ஐபிஎல் ஏலத்தில் இறுதிப் பட்டியலில் தமிழக வீரர்கள் 9 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிகெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது.

ஏலத்திற்காக 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 346 பேர் அடங்கிய இறுதிப்பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதிலிருந்து 70 வீரர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள்.

இதில் மலிங்கா, மேத்யூஸ் (இலங்கை), மெக்கல்லம், ஆண்டர்சன் (நியூசிலாந்து), கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரன் (இங்கிலாந்து), ஷான் மார்ஷ், டார்சி ஷார்ட் (ஆஸ்திரேலியா), காலின் இங்ராம் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோரின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை.இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டின் அடிப்படை விலை ரூ. 1. 5 கோடி.   யுவராஜ் சிங், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகியோரை ரூ. 1 கோடியில் இருந்து ஏலம் கேட்க வாய்ப்புள்ளது. இஷாந்த் ஷர்மாவின் விலை ரூ. 75 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும் என தெரிகிறது.

ஐபிஎல் ஏலத்தின் இறுதி பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த பாபா இந்திரஜித், அனிருதா காந்த், அஸ்வின் முருகன், பாபா அபரஜித், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர், விவேக், சஞ்சய், விக்னேஷ் என 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.    

.

மூலக்கதை