கஜா புயல் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாக தமிழக அரசே காரணம்: மத்திய அரசு

தினகரன்  தினகரன்
கஜா புயல் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாக தமிழக அரசே காரணம்: மத்திய அரசு

மதுரை: கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாக தமிழக அரசே காரணம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது. புயல் இழப்பு தொடர்பாக மத்திய அரசு கேட்ட சந்தேகங்களுக்கு தமிழக அரசு இதுவரை விளக்கம் தரவில்லை எனவும் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய குழுவின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வது குறித்து வருகிற 17ம் தேதிக்குள் பதில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை