மெஸ்ஸிக்கு அழைப்பு விடுத்த ரொனால்டோ!

PARIS TAMIL  PARIS TAMIL
மெஸ்ஸிக்கு அழைப்பு விடுத்த ரொனால்டோ!

கால்பந்து துறையில் இரு துருவங்கள் என வர்ணிக்கப்படும், கிறிஸ்டீயானோ ரொனால்டோ மற்றும் லியேனல் மெஸ்ஸி ஆகியோர் எப்போதுமே எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள் என்பது நாம் அறிந்த விடயமே.
 
ஆனால் இருவரும் ஓருவருக்கொருர் சளைத்தவர்கள் அல்ல என்பது நாம் இங்கு நினைவுக் கூர வேண்டிய விடயம்.
 
நடப்பு ஆண்டு இருவருக்குமே பேசப்படும் ஆண்டாக அமையாவிட்டாலும், அவர்களின் கடந்த கால சாதனைகள் இன்றும் பேசப்படக் கூடியவை.
 
தேசிய கால்பந்து அணியையும் தாண்டி, ஆர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார்.
 
அதேபோல போர்த்துக்கல் அணியின் வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, லா லிகா தொடரில் ரியல் மெட்ரிட் அணி, இங்கிலாந்து பிரிமீயர் லீக், பல தொடர்களில் ஆதிக்கம் செலுத்தியவர். தற்போது இத்தாலியில் நடைபெறும் செரி ஏ தொடரில், ஜூவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
 
இந்த நிலையில் கிறிஸ்டீயானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸியை ஸ்பெயினிலேயே விளையாடிக் கொண்டு இருக்காமல், இத்தாலிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ”ஒருநாள் மெஸ்சி இத்தாலிக்கு வருவதை நான் கட்டாயம் விரும்புகிறேன். என்னுடைய சவாலை அவர் ஏற்பார் என்று நம்புகிறேன். ஆனால், ஸ்பெயினில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.
 
அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனாவிற்காக விளையாடினால், நான் அவரை இழக்கவில்லை. அவர்தான் என்னை இழக்கிறார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கலில் விளையாடியுள்ளேன். அவர் இன்னும் ஸ்பெயினிலேயே இருக்கிறார். ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால், எனக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும். அதை நான் விரும்புவேன். இரசிகர்களை மகிழ்ச்சியாக மாற்ற விரும்புவேன்.
 
மெஸ்சி மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், இங்கே நான் எதையும் தவறவிடவில்லை. இது என்னுடைய புதிய வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய வசதியாக இடத்தை விட்டு, இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன். இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான் இன்னும் வியக்கத்தக்க வீரர்தான் என்பதை நிரூபித்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

மூலக்கதை