சர்வதேச பேட்மின்டன் போட்டி முதல்நிலை வீராங்கனைகளுடன் மோதும் சிந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச பேட்மின்டன் போட்டி முதல்நிலை வீராங்கனைகளுடன் மோதும் சிந்து

குவாங்ஷூ: சர்வதேச அளவிலான பேட்மின்டன் போட்டியில், முதல்நிலை வீராங்கனைகளை எதிர்த்து இந்தியாவின் சிந்து விளையாட உள்ளார்.
சர்வதேச பேட்மின்டன் சம்மேளன டூர் பைன்ஸ் போட்டிகள் சீனாவின் குவாங்ஷூ நகரில் நடைபெறவுள்ளது. விரைவில் தொடங்கவுள்ள இப்போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி. வி. சிந்து பங்கேற்கிறார்.

‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள சிந்து, நடப்பு சாம்பியன் அகேன் யெமகுச்சி, நம்பர் ஒன் வீராங்கனை டைசு யிங் ஆகியோருடன் பலப்பரிட்சை நடத்த உள்ளார். கடுமையான சுற்றில் சிந்து இடம்பெற்றுள்ளதால் அவர் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு துபாயில் நடந்த சர்வதேச சாம்பியன் போட்டியில் சிந்து 2வது இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் போட்டி கடுமையாக இருந்தாலும் சிந்து சாதனை படைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.   ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அறிமுக வீரர் சமீர் வர்மாவுக்கு எளிதான சுற்றே அமைந்துள்ளது.

எனவே, நாக் அவுட் சுற்று அவருக்கு எளிதாக இருக்கும் என தெரிகிறது.

.

மூலக்கதை