உலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ்

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி போட்டியில், இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.

16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், நேற்று இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

25வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் வில் கால்னனும், 44வது நிமிடத்தில் லூகா டெய்லரும் கோல் அடித்து அசத்தினர். கடைசி வரை நியூசிலாந்து அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்கவில்லை.   கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி காலிறுதி வாய்ப்பை இழந்தது.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ், சீனா அணிகள் மோதின. ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.



இந்நிலையில், பிரான்ஸ் அணி வீரர் டிமோத்தி 36வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இந்நிலையில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. சீனா அணி காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

லீக் சுற்றில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜெர்மனி அணிகள் நேரடியாக காலிறுதிக்கு ஏற்கனவே முன்னேறின என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

காலிறுதி போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இனிவரும் ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும்.

.

மூலக்கதை