இலங்கையில் அதிபர் பதவிக்கான அதிகாரத்தை நீக்க பேச்சு: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இலங்கையில் அதிபர் பதவிக்கான அதிகாரத்தை நீக்க பேச்சு: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

இலங்கையில் அதிபர் பதவி மற்றும் அதற்கான அதிகாரங்களை நீக்குவது குறித்து அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு உருவாக்கல் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். புதிய அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் பிரதமர் பதவி குறித்து அவர்கள் பேசியதுடன், தேர்தலுக்கு பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதனிடையே மார்ச் மாதத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தற்போது, அதிபர் பதவி மற்றும் அதற்கான அதிகாரங்கள் அமலில் இருந்தாலும், மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அந்த பதவி அவசியமில்லை என்று ஜே.வி. பி சுட்டிகாட்டியுள்ளது.

மூலக்கதை