ஆந்திராவில் 100 இடங்களில் ரூ5க்கு உணவு வழங்கும் அண்ணா கேன்டீன் : முதல்வர் சந்திரபாபு நாயுடு துவக்கம்

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் 100 இடங்களில் ரூ5க்கு உணவு வழங்கும் அண்ணா கேன்டீன் : முதல்வர் சந்திரபாபு நாயுடு துவக்கம்

திருமலை : ஆந்திரா முழுவதும் ரூ5 விலையில் உணவு வழங்கும் 100 அண்ணா கேன்டீன்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். ஆந்திரா முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 203 அண்ணா கேன்டீன் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கேன்டீனில் 3 வேளையும் அந்தந்த பகுதிக்கு ஏற்ப சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு ஒரு வேளைக்கு ரூ5 என்று 3 வேளை வழங்கப்படுகிறது. இதற்காக அரசு 1 தட்டுக்கு ரூ18.35 வீதம் மானியமாக வழங்குகிறது. இந்நிலையில், விஜயவாடாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் கட்டமாக 100 அண்ணா கேன்டீன்களை திறந்து வைத்து பேசியதாவது: மாநில பிரிவினையின்போது பல்வேறு இன்னல்கள், கஷ்டங்களை அனுபவித்தோம். அந்த நேரத்தில் மத்திய அரசு நமக்கு உதவாவிட்டாலும் மாநில மக்கள் உதவி செய்தனர். சுலபமாக தொழில் தொடங்கக்கூடிய மாநிலத்தில் தொடர்ந்து 3வது ஆண்டாக ஆந்திரா இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 215 வீடுகள் கட்ட ரூ38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை