மணிசங்கர் மீது தேசத் துரோக வழக்கு? போலீசுக்கு கெடு

தினகரன்  தினகரன்
மணிசங்கர் மீது தேசத் துரோக வழக்கு? போலீசுக்கு கெடு

புதுடெல்லி :  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான் தூதர் உள்ளிட்டோருடன் ரகசிய கூட்டம் நடத்தினார். இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக தேச துரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி பாஜ தலைவர் அஜய் அகர்வால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதி வசுந்தரா ஆஜாத் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘மணிசங்கர் அய்யர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையை செப்டம்பர் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மூலக்கதை