மணிப்பூரில் நிலச்சரிவு 9 பேர் சாவு

தினகரன்  தினகரன்
மணிப்பூரில் நிலச்சரிவு 9 பேர் சாவு

இம்பால் :  மணிப்பூரில் நேற்று காலை 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமெங்லாங் நகரின் 3 இடங்களில் நேற்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 9 பேர் மண்ணில் புதையுண்டனர். இவர்களில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 குழந்தைகளின் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

மூலக்கதை