வரைவு திட்டம் தயார் பலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
வரைவு திட்டம் தயார் பலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம்

புதுடெல்லி : பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயார்நிலையில் உள்ளதாக மத்திய அரசின் நீதித்துறை தெரிவித்துள்ளது. பலாத்கார சம்பவங்களை முடிவு கட்டும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தின் ஒரு பகுதியாக பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு தற்போது தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. மத்திய உள்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு இதற்கான வரைவு திட்டத்தை அதிகாரிகள் குழு தயாரித்துள்ளது.இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாலியல் பலாத்கார குற்றங்களை விரைந்து விசாரிக்கும் விதமாக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயார் நிலையில் உள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வரைவு திட்டம் பரிசீலனைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை