ராகுல் காந்தியுடன் இயக்குனர் பா.ரஞ்சித் சந்திப்பு

தினகரன்  தினகரன்
ராகுல் காந்தியுடன் இயக்குனர் பா.ரஞ்சித் சந்திப்பு

புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் சந்தித்து பேசினார். ரஜினிகாந்த நடித்த கபாலி, காலா, கார்த்தி நடித்த மெட்ராஸ் படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர், நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்த புகைப்படத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில், ‘மெட்ராஸ், கபாலி மற்றும் காலா படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோரை நேற்று டெல்லியில் சந்தித்தேன். அரசியல், திரைப்படம் மற்றும் சமூக விஷயங்கள் குறித்து பேசினோம். அவருடனான சந்திப்பு நல்லமுறையில் இருந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்க உள்ளது\'\' என குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து ரஞ்சித் கூறும்போது, ‘நாட்டில் நிலவும் ஜாதி, மத அச்சுறுத்தல்கள் தொடர்பாக பேசினோம். நமது உரையாடல்கள் செயல்வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு தேசிய தலைவர் மாற்று கருத்துள்ளவர்களுடன் பேசுவது உற்சாகம் தருகிறது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோரிக்கை வைத்தேன். பேரறிவாளனை விடுவிக்க ஆட்சேபம் இல்லையென்று ராகுல் காந்தி தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உதவுவதாக ராகுல் கூறினார்’ என்றார்.

மூலக்கதை