தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை ராணுவத்தில் ஒழுங்கீனத்தை பொறுத்து கொள்ள முடியாது

தினகரன்  தினகரன்
தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை ராணுவத்தில் ஒழுங்கீனத்தை பொறுத்து கொள்ள முடியாது

புதுடெல்லி : நாட்டில் உள்ள அனைத்து ராணுவ முகாம்களுக்கும் தளபதி பிபின் ராவத் கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து ராணுவ அமைப்புகளிலும் உள்ளவர்கள்  ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. வீரர்கள் தங்களது பதவி உயர்வுக்காக உயர் அதிகாரிகளிடம் முகஸ்துதி பாடுவதை தவிர்க்க வேண்டும். தகுதியுடைய ஓய்வு பெற்ற அதிகாரிகள் தவிர பிற அதிகாரிகளுக்கு, ஆர்டர்லியாக வீரர்களை பணியமர்த்தக்கூடாது. உடல்நலனை பாதுகாக்கும் வகையில் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளக்கூடாது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை