கல்வி கட்டணம் செலுத்தாததால் பள்ளியின் பாதாள அறையில் 16 குழந்தைகள் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்

தினகரன்  தினகரன்
கல்வி கட்டணம் செலுத்தாததால் பள்ளியின் பாதாள அறையில் 16 குழந்தைகள் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்

புதுடெல்லி : மத்திய டெல்லி ஹாஸ் ஹஸி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த திங்கள்கிழமை, பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்தியவர், செலுத்தாதவர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் மழலையர் வகுப்பில் படிக்கும் 16 குழந்தைகள் கல்வி கட்டணம் செலுத்தாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அழைத்து வந்து, காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை பள்ளி கீழ்தளத்தில் தனியாக ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பள்ளி முடிந்ததும் இதுபற்றிய விவரம் குழந்தைகள் மூலம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார், பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கல்விக் கட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து சாரித்தனர். இதுபற்றிய செய்தி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக அறிந்த மாநில பெண்கள் ஆணையம், இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி காவல்துறை மற்றும் கல்வி துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மூலக்கதை