குவிண்டால் பருத்தி ரூ5,200க்கு கொள்முதல்

தினகரன்  தினகரன்
குவிண்டால் பருத்தி ரூ5,200க்கு கொள்முதல்

திருவாரூர் : திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 300 டன் பருத்தி ஏலம் விடப்பட்டது. இதில் குவிண்டால் ரூ5,200க்கு கொள்முதல் செய்யப்பட்டது. திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 300 டன் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கோவை, சேலம் உட்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 489க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 800க்கும் ஏலம் எடுத்தனர். இதன்படி சராசரியாக குவிண்டால் ஒன்றுக்கு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 200 விலையாக கிடைத்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.50 கோடி என்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயலாளர் சேரலாதன் தெரிவித்தார்.

மூலக்கதை