திடீரென தீப்பற்றி எரிந்து 50 மரங்கள்! அதிர்ச்சியில் யாழ் மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
திடீரென தீப்பற்றி எரிந்து 50 மரங்கள்! அதிர்ச்சியில் யாழ் மக்கள்

யாழ். தெல்லிப்பழைப் பகுதியில் திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சுமார் 50க்கும் மேற்பட்ட பனைமரங்களே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
 
குறித்த சம்பவம் தெல்லிப்பழை 8ஆம் வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
துர்க்காபுரத்தில் கைவிடப்பட்ட காணியொன்றில் உள்ள வடலிகள் மற்றும் பனைமரங்களில் வேகமாகத் தீ பரவியது. 
 
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இது குறித்து தீயணைப்புப் படையினருக்கும், பிரதேச சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
 
குறித்த இடத்திற்கு விரைந்த யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 
இந்த தீ விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பனைமரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. குப்பைக்குத் தீ வைக்கும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

மூலக்கதை