பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்...

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த படம் விசுவாசம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

விசுவாசம் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு 40 சதவிகிதம் மட்டுமே முடிவடைந்துள்ளதால் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக ஒரு படவிழாவில் இயக்குநர் சிவா கூறியுள்ளாராம். 

மூலக்கதை